வாரிசு நடிகர்களாக தமிழ் திரையுலகில் கால்பதித்தவர்கள் தான் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்கள் கார்த்தி நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடையே பேராதரவைப் பெற்று விட்டது.
இதனைத் தொடர்ந்து கார்த்தி தற்பொழுது பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார் இந்த இரண்டு திரைப்படங்களும் முடிந்த பிறகு சென்சேஷன் இயக்குனர் முத்தையா உடன் ஒரு திரைப்படத்தில் இணைய இருப்பதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதை தவிர கார்த்தி இன்னும் நிறைய இயக்குனர்களுடனும் கைகோர்க்க உள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது மேலும் சமீப காலமாகவே தமிழ் திரையுலகில் பணியாற்றி வரும் பிரபலங்களின் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல் தற்போது கார்த்திக்கின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கார்த்திக்கின் வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது என கூறுவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் கார்த்தி சர்தார் திரைப்படத்தில் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அது மட்டும் எங்களுக்கு தெரிந்தால் போதுமென கூறுவது மட்டுமல்லாமல் எப்படியோ ஒரு வழியாக தமிழ் திரையுலகில் கார்த்தி ஒரு இடத்தை பிடித்து விட்டார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.