“டான்” பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி விஜயுடன் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் – எந்த படத்தில் தெரியுமா.?

VIJAY-
VIJAY-

அண்மைகாலமாக இளம் இயக்குனர்கள் பலரும் டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்க ஆசைப்படுகின்றனர். அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளவர் தான் சிபிச்சக்கரவர்த்தி இவர் இயக்குனர் அட்லீயின்உதவி இயக்குனராக இருந்து அனைத்தையும் கற்றுக் கொண்டு தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

எடுத்தவுடனேயே நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டான் என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த படம் நேற்று கோலாகலமாக திரையரங்கில் வெளியானது. படம் முழுக்க முழுக்க காலேஜ் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் இந்த படத்தில் ஆக்ஷன் செண்டிமென்ட் காமெடி என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இதனால் இந்த திரைப்படமும் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது இதுவரை தமிழகத்தில் 9 கோடியும் உலக அளவில் 15 கோடியும் முதல் நாளே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களில் நல்ல வசூல் வேட்டையை அள்ள காத்திருக்கிறது.

இந்த படம் சிவகார்த்திகேயனுக்கும் சரி இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கும் மிக மிக முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தளபதி விஜயின் படமொன்றில் நடித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் மெர்சல் இந்த படத்தில் ஒரு காட்சியில் விஜய் பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுப்பார்கள் அதில் ஒருவராக சிபிச்சக்கரவர்த்தி இருப்பார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.