இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மைகாலமாக மாஸ் கலந்த ஆக்ஷன் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் முதலில் மாநகரம் என்னும் திரைப்படத்தை இயக்கிய அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பின் நடிகர் கார்த்தியை வைத்து கைதி, விஜய்யை வைத்து மாஸ்டர் இப்பொழுது உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம்.
என்னும் மாபெரும் ஆக்சன் படத்தை கொடுத்து இருக்கிறார் படம் ஜூன் 3ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒருசில அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்த நிலையில் நேற்று விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச்சில் படத்தின் டிரைலரும் ரிலீஸ் செய்யப்பட்டது.
டிரைலரை வைத்து பார்க்கும்போது படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என தெரியவந்து இருக்கிறது. நிச்சயம் இந்த திரைப்படம் கமல் மற்றும் விஜய் சேதுபதி சினிமா கரியரில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தில இவர்கள் இருவரையும் தாண்டி பகத் பாசில், விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி, நரேன் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒரு நடிகரும் இந்த படத்தில் நடித்துள்ளார் ஆனால் அவரை சைலண்டாக வைத்துள்ளது. அந்த நடிகர் வேறு யாருமல்ல நடிகர் சூர்யா தான். விக்ரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வந்து போவதாக கூறப்படுகிறது. டிரெய்லரில் கூட சூர்யா மாஸான லூக்கில் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
நிச்சயம் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அவர் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது விக்ரம் படத்தின் உதவி இயக்குனர் ஒருவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்ட தற்பொழுது வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.