மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படம்.!

nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக பார்க்கப்படுபவர்  நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் ஆரம்பத்தில் இருந்து  உச்ச நட்சத்திர நடிகர்களான சரத்குமார், அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற..

டாப் ஹீரோக்களின் படங்களில் ஓடிக்கொண்டே இருக்கிறார் அதனால் இவரது மார்க்கெட் கீழே இறங்காமல் உச்சத்திலேயே இருக்கிறது. மேலும் இவர் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுகின்றன அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோல்ட் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து நயன்தாரா கனெக்ட், ஜவான், நயன்தாரா 75, இறைவன் என பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சினிமா உலகில் இப்படி ஒரு பக்கம் ஓட மறுபக்கம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார் இவர்கள் இருவருக்கும் தற்போது இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றன.

சினிமா, குடும்பம் என இரண்டுக்கும் நேரத்தை ஒதுக்கி அழகாக வாழ்ந்து வருகிறார் இப்படி இருக்கும் நயன்தாரா ஒரு படத்திற்கு சுமார் 10 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நயன்தாரா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது 2012 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவை சந்தித்த நயன்தாரா..

தானே புயல் நிவாரண நிதிக்கு 5 லட்சம் கொடுத்தார் மேலும் அப்போது முதலமைச்சர்  ஜெயலலிதாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படம் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

nayanthara
nayanthara