“ஜீன்ஸ்” திரைப்படத்தின் போது இயக்குனர் ஷங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படம் – எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரல் போட்டோ.

director-shankar-

தமிழ் சினிமாவில் இதுவரை இயக்குனர் ஷங்கர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் பிரமாண்ட பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்து அந்த பட்ஜெட்டை விட இரண்டு மூன்று மடங்கு லாபத்தை கொடுத்து உள்ளதால் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றார்.

மேலும் இவரது திரைப்படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்துவதோடு மட்டுமல்லாமல் தோல்வியை சந்திக்காத படங்களாகத் தான் ஷங்கரின் படங்களில் இதுவரை இருந்து வந்துள்ளன. அந்த காரணத்தினால் தான் இன்றுவரையிலும் தவிர்க்கமடியாத ஒரு இயக்குனராக இந்திய அளவில் பார்க்கப்படுகிறார்.

தமிழில் ரஜினி, கமல், விஜய், அர்ஜுன், பிரசாந்த் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் சமீபத்தில் மற்ற மொழி பக்கங்களிலும் தனது திறமையை காட்ட ஆரம்பித்துள்ளார் ஹிந்தியில் ரன்பீர் கபூரை வைத்து அந்நியன் படத்தின் ரீமேக் செய்ய இருந்த அதற்கு முன்பாக தெலுங்கில் ராம் சரணுக்கு ஒரு கதையை கூறினார்.

அது உடனே பிடித்துப் போக படமாக்கப்பட்டு வருகிறது ராம்சரண மற்றும் கியாரா அத்வானி அவர்கள் வைத்து தற்போது இரண்டாவது கட்ட ஷூட்டிங் எடுக்க இருக்கிறார். தமிழில் இவர் ஏற்கனவே கமலை வைத்து இந்தியன் என்ற திரைப்படத்தை சூப்பர் ஹிட்டாக கொடுத்து இருந்தார் அதன் இரண்டாம் பாகத்தை அண்மையில் தொடங்கினார் ஆனால் எதிர்பாராத விதமாக செட்டில் இருந்த கிரேன் கீழே விழுந்து சிலர் உயிரிழந்தனர்.

அதனை எடுத்து இத்தனை நாள் கிடப்பில் கிடந்தது இந்தியன் 2 ஒரு வழியாக மீண்டும் கமல் லைகா நிறுவனம் ஷங்கர் ஆகிய மூவரும் இணைந்து இந்த படத்தை பணியாற்ற உள்ளனர் அதாவது அடுத்த மாதமோ அல்லது ஜனவரி ஆரம்பத்திலேயே இந்தியன் 2 படம் எடுக்கப்படும் என தெரியவருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஷங்கர் பிரசாந்தை வைத்து ஜீன்ஸ் என்ற திரைப்படத்தை எடுத்த பொழுது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த அழகிய புகைப்படம்.

director-shankar-
director-shankar-