சென்ற வருடம் டிசம்பர் மாதம் சின்னத்திரைக்கு ஒரு இழப்பு என்றால் அது சித்ராவின் மரணம் தான் அவர் இறந்தது சின்னத்திரை பிரபலங்கள் பலராலும் தாங்க முடியாமல் அவருடன் இருந்த புகைப்படங்கள்,வீடியோக்கள் என அனைத்தும் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு மனதை தற்போது வரை ஆறுதல் படுத்தி வருகிறார்கள்.
மேலும் சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவரான ஹேம்நாத் தான் காரணம் என்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போது அவரிடமிருந்து பல உண்மைகள் வாங்கியதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வைரலாகி வந்தது.
அதுமட்டுமல்லாமல் ஒரு சில நாட்களுக்கு முன்பு RDO விசாரணை அதிகாரிகள் 15 பேரிடம் விசாரித்து அதை 16 பக்கங்களுக்கு தாக்கல் செய்ததாக சமீபத்தில் இந்த தகவல் வெளியாகியது.
இந்நிலையில் சித்ராவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி மற்றும் ஸ்வீட்டியுடன் மறைந்த சித்ரா எடுத்த புகைப்படமாக இருக்கிறது.
இதோ அந்த புகைப்படம்.