பிரமாண்ட இயக்குனர் ஷங்கரை தொடர்ந்து அவரது வாரிசு இளைய மகள் அதிதி ஷங்கரும் சினிமாவில் ஹீரோயின்னாக நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நடிக்க வருவதற்கு முன்பாக அவர் டாக்டர் படிப்பை தான் முதலில் மேற்கொண்டார்.
அதில் பட்டம் பெற்றாலும் அவருக்கு அவரது அப்பா போல சினிமாவையே ரொம்பவும் பிடித்து இருந்ததால் வேறு வழி இல்லாமல் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். முதலாவதாக எடுத்த உடனேயே அதிதி ஷங்கர் முன்னணி நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்து விருமன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்ததாக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்குகிறார் இதற்கு முன்பாக அவர் மருது, தேவராட்டம், கொம்பன் போன்ற பல்வேறு சிறப்பான படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஜெய்சங்கர் நடித்து உள்ளார் அவருக்கு முதல் படங்கள் ஒரு மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்புவுடன் அதிதி சங்கர் கைகோர்க்கிறார். ஆம் கொரோனா குமார் படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து இவர் நடிக்க உள்ளதால் அதிதி ஷங்கரின் மார்க்கெட் தற்போது உயர்ந்து கொண்டே செல்கிறது.
தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் கைகோர்க்க உள்ளதால் அதிதி சங்கரும் மற்ற நடிகைகள் போல் இவரும் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து கியூட்டான மற்றும் சற்று கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.