தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ஒரு சிறப்பான படத்தை கொடுக்க முதல் முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்து தனது 66 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜூ தயாரிக்கிறார்.
இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் விஜயை தொடர்ந்து பல டாப் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் அந்தவகையில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு மற்றும் பல டாப் ஹீரோ, ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
விஜய்யின் 66 வது திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று படம் ரிலீஸ் ஆகும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு விஜய்க்கு இந்தப் படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி வம்சி எடுப்பார்.
ஏனென்றால் வம்சி இதுவரை இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்துள்ளன அந்த வகையில் இந்த படமும் இடம்பெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் நடிகர் மனோபாலா சரத்குமார் ஆகியவர்கள் உட்கார்ந்து உள்ளனர். விஜய் 66 படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..