நல்லா தான இருந்துச்சு..! அது உங்களுக்கு பிடிக்கலையா கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான மாநாடு பட நடிகையின் புகைப்படம்..!

kalyani-1

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு இவர் சமீபத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலமாக பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்றே கூறலாம்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது மேலும் சிம்பு இந்த திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து கெத்து காட்டியது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இவருடைய தந்தையார் பிரபல தயாரிப்பாளர் எழுத்தாளர் இயக்குனர் என பன்முக திறன் கொண்டவர். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனரின் மகள் கல்யாணி பிரியதர்ஷினி மாநாடு திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார்.

இவர் பாலிவுட் சினிமாவில் முதன்முதலாக துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக தன்னுடைய பணியை ஆரம்பித்தார் அதனை தொடர்ந்து துணை கலை இயக்குனராக பணியாற்றி வந்த நமது நடிகை தெலுங்கு திரைப்படம் ஒன்றின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ என்ற திரைப்படத்தில் கூட நமது நடிகை நடித்திருப்பார். என்னதான் இவர் பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் சமீபத்தில் நடித்த மாநாடு திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது.

kalyani-1
kalyani-1

இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளது. அவர் அந்தப் புகைப்படத்தில் தனது தலைமுடியை ஸ்டைல் என்ற பெயரில் நூடுல்ஸ் போல மாற்றி உள்ளது தான் காரணம்.

kalyani-1