இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயன் மற்றும் கவுண்டமணியின் புகைப்படம்.! அதுவும் எந்த வகையில் தெரியுமா.?

sivakarthikeyan
sivakarthikeyan

சின்னத்திரையிலிருந்து தனது அயராத உழைப்பின் மூலம் வெள்ளித்திரைக்கு மாறி பல திரைப்படங்களில் பல முக்கிய நடிகர்களுக்கு நண்பனாக நடித்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கி பின்பு காமெடியனாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து நிறைய திரைப்படங்களில் நடித்து தற்போது கதாநாயகனாக வலம் வருகிறார்.

ஆம் சிவகார்த்திகேயன் காமெடியனாக இருந்து கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை கொடுத்தது தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் அவர் கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது.

மேலும் இவரது நடிப்பில் தற்போது அயலான் மற்றும் டான் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது தொடர்ந்து இவரது நடிப்பில் ஏற்கனவே டாக்டர் என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது இந்நிலையில் தமிழ் திரையுலகில் அந்த காலகட்டத்தில் நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தவர் தான் கவுண்டமணி இவர் அந்த காலத்தில் பார்த்தால் நடிக்காத திரைப்படங்களே இல்லை என்ற அளவிற்கு அனைத்து நடிகர்களின் திரைப்படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்தார்.

இவருடன் இணைந்து செந்திலும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இப்படி இருக்கும் நிலையில் தற்போது உள்ள காமெடி நடிகர்கள் எல்லாம் ஏனோதானோ என நடித்து விட்டு போகிறார்கள் ஆனால் கவுண்டமணி எந்த திரைப்படத்தில் நடித்தாலும் தனது ரசிகர்களுக்கு புரியும்படியாக நல்ல கருத்துக்களை கூறி இருப்பார்.

மேலும் சிவகார்த்திகேயன் கவுண்டமணியை நேரில் சந்தித்து அவரிடம் பேசி உள்ளார் அப்பொழுது அவர் எடுத்த புகைப்படத்தையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் எதற்காக அவரை சந்தித்தார் என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.