நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் – பாக்கறதுக்கு இரண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கிறார்களே..

dhanush

தமிழ் சினிமாவில் காதல் ஆக்ஷன் சென்டிமென்ட் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் எந்த படமாக இருந்தாலும் சரி அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி படத்தை வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறார் நடிகர் தனுஷ். அதனாலேயே அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்குகிறது.

கடைசியாக கூட இவர் நடிப்பில் வெளிவந்த கல்யாண கலாட்டா,ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றது அதனைத் தொடர்ந்து இப்போது இவரது கையில் திருச்சிற்றம்பலம், மாறன் மற்றும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படி சினிமா உலகில் வெற்றியை சம்பாதித்தாலும் நடிகர் தனுஷ் தற்போது குடும்ப பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் 18 வருடங்களாக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா உடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து போவதாக ஒரு தகவல் பூதாகரமாக வெடித்தது. அன்றிலிருந்து இப்போதுவரையிலும் தனுஷ் பற்றிய பேச்சுக்கள் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்துவருகிறது. தற்போது ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களை சேர்த்து வைக்க பல்வேறு நடிகர்களும் பிரபலங்களும் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் எந்த தகவலும் வராமல் இருந்து வருகிறது. கடந்த காதலர் தினத்தை முன்னிட்டு கூட  ஐஸ்வர்யா சமூக வளைதளத்தில் தனுஷின் பெயரை நீக்கிவிட்டு அப்பாவின் பெயரை வைத்துள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷ் மகன் யாத்திரை உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் தற்போது லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

dhanush and son
dhanush and son