சினிமாவுலகில் காமெடி நடிகர் ஹீரோவாக நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பதை மக்களுக்கு புரிய வைத்தவர் வடிவேலு. 90 காலகட்டங்களில் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி நாளும் போகப் போக காமெடி கலந்த படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.
அப்படி இவர் நடிப்பில் வெளியான இந்திரலோகத்தில் நான் அழகப்பன், இருபத்தி மூன்றாம் புலிகேசி, தெனாலிராமன் போன்ற படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்து சினிமாவுலகில் தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் சினிமாவில் சில பிரச்சனைகளை சந்தித்ததால் நான்கு வருடங்கள் தமிழ் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது.
இருப்பினும் வடிவேலு மற்றும் வடிவேலு காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டன ஒருவழியாக இந்த பிரச்சனை எல்லாம் முடிந்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததால் ரசிகர்களும் தற்போது சந்தோஷத்தில் இருப்பதோடு வடிவேலுவும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவும் காமெடியனாக நடித்து வருகிறார்.
முதலாவதாக லைக்கா நிறுவனத்துடன் கை கோர்த்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழு அடுத்தடுத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது புகைப் படத்தில் வடிவேலுடன் முக்கிய பிரபலம் ஒருவரும் இருக்கிறார் இதோ நீங்களே பாருங்கள்.