குடும்ப குத்துவிளக்காக மாறிய யாஷிகா ஆனந்த் அவரே வெளியிட்ட புகைப்படம்.!

Yashika Anand

பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக பங்கு பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்தவர் தான் யாஷிகா ஆனந்த் இவர் இதனைத்தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டுகுத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.

அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நிறைய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் இவர் சமீபத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடி இருந்தார் மேலும் இவன் தான் உத்தமன்,ராஜபீமா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சினிமா துறையில் படு பிசியாக இருந்தாலும் யாஷிகா ஆனந்த் அவ்வபோது தனது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போதும் இவர் போட்டோ ஷூட் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படத்தில் இவர் கல்யாணப் பெண் போல் புடவையில் அம்சமாக இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்.