நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பீச்சில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முதன்முதலாக நீதான அவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டபடி குற்றம், விளையாடவா என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு அட்டகத்தி திரைபடத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் இவருக்கு காக்கா முட்டை திரைப்படம் தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது அந்த திரைப்படத்தின் மூலம் தன்னுடைய முழு நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயனுடன் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பல நடிகைகள் தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல பெயர் தான் கிடைத்தது.
இந்தநிலையில் தற்போது இவர் பூமிகா, திட்டம் 2, டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இதில் பல திரைப்படங்கள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்டன.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கக் கூடியவர் இவர் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் தான் அடிக்கடி நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபகாலமாக சமூக வளைதளத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் பீச்சில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளத்தை அள்ளித்தா ரம்பா போல் தன்னுடைய முழு தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.