குடிபோதையில் மூடப்பட்டிருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சொல்லி ரகளை செய்த குடிகாரர்.! வைரலாகும் சிசிடிவி காட்சி.

petrol-tamil360newz
petrol-tamil360newz

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் பங்குகள் 2 மணிக்கே மூடப்பட்டுவிடும்.

திண்டுக்கல்லில் உள்ள பழனியில் பெட்ரோல் பங்குகள் மதியம் 2 மணிக்கே மூடப்பட்டு விடும். இந்நிலையில் பழனியில் உடுமலை சாலையில் செயல்படும் பெட்ரோல் பங்கிற்கு இரவு 7 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த  குடிகாரர் ஒருவர் பெட்ரோல் போடும் படி கேட்டுள்ளார். அதற்கு அங்குள்ள ஊழியர்கள் பங்க் மூடப்பட்டுவிட்டது காலையில் தான் திறக்கும் என்று கூறிவிட்டார்கள்.

இதனைதொடர்ந்து அந்த குடிகாரர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பெட்ரோல் பம்ப் மீது போட்டதால் பெட்ரோல் நிரப்பும் எந்திரம் சேதமானது. அதோடு மட்டுமில்லாமல் அங்கிருந்த தீயணைக்கும் சிலிண்டரை எடுத்து வீசி ரகளை செய்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் குடிபோதையில் இருப்பவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனை அறிந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் கணேசன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் மேலும் சிசிடிவி காட்சி உதவியுடன் அந்த குடிகார ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.