பணத்தை மாலையாக அணிந்த பீட்டர் பால்,வனிதா ஜோடி.! இது தான் காரணமோ.

vanitha
vanitha

இப்பொழுது இருக்கும் பிரபலங்கள் மீடியா உலகில் மேலும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள சர்சையான செயல்களை செய்து வருகின்றனர். அப்படி தமிழ் சினிமா உலகில் நாயகியாக வந்து பின் காணாமல் போன வனிதா விஜயகுமார்.

சமீபகாலமாக மீடியா உலகில் சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் மேலும் பிரபலமடைய அவர் சர்ச்சையான சில விஷயங்களை செய்து வந்திருந்தார். அது ஒரு பெரும் சில அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் அது காலப்போக்கில் மறைந்தன இந்த நிலையில் திடீரென அவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார்.

அதில் நுழைய உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை திடீரென மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இது மக்களிடையே மேலும் அதிர்ச்சியை கிளப்பின அதற்கு தனது பேச்சு திறமையின் மூலம் பதிலடி கொடுத்திருந்தார் வனிதா மேலும் அதற்கு ஒரு முடிவு கட்டினார்.

இந்த நிலையில் வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் என்பவருக்கு சமீபத்தில்  உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

அதனையொட்டி கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகியோர் கழுத்தில் ரூபாய் நோட்டுகள் மாலையாக அணிவித்து குபேர லட்சுமி சாமி பூஜையை மேற்கொண்டனர். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.