தமிழ் சினிமா உலகில் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் பேரரசு. இவர் தளபதி விஜய்யை வைத்து சிவகாசி, திருப்பாச்சி போன்ற அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களின் மூலம் விஜயின் சினிமா பயணமும் வேற லெவல் உச்சத்தைத் தொட்டது.
இந்த இரண்டு படங்களும் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் காதல் என அனைத்தும் பொருந்தி இருப்பதால் இந்த படம் அப்பொழுது ஆண் ரசிகர்களையும் தாண்டி பெண் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது என்பது குறிப்பிடத்தக்கது இதன் பிறகுதான் விஜய்யின் சினிமா கேரியரில் ரசிகர்கள் அதிகமாக இன்னும் உருவாக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பேரரசு விஜய்யை வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்கியிருந்தாலும் அஜித்துடன் இணையாமல் இருந்தது அவருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது இந்த நிலையில்தான் அஜித்துடன் இணைந்து திருப்பதி எனும் திரைப்படத்தை கொடுத்தார். படம் வெளிவந்து இதுவரை 13 வருடங்கள் ஆகியுள்ள அதையடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் குறித்தும் அஜித் குறித்தும் சில விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் சொன்னது நான் அஜீத்துடன் பணிபுரியாமல் இருந்தது எனக்கு ரொம்ப வந்தது இந்த நிலையில் தான் ஏவிஎம் டென்ஷனில் இருந்து போன் வந்தது. நீங்கள் எங்களுக்கு ஒரு படம் பண்ணவேண்டும் என கூறினார் ஹீரோ யார் என கேட்டேன் அஜித் என்றார்கள் என்னது இது அஜித்துக்கு தெரியுமா கேட்டேன் அஜித் தான் உங்களுக்கு போன் பண்ண சொன்னாள் அப்படி என கூறவே அவ ரொம்ப சந்தோஷப்பட்டார்.
பின் அஜித்திற்காக கதையை எழுதிக் கொண்டு அவரது வீட்டில் போய் சந்தித்தாராம். அப்பொழுது அஜித் வீட்டில் அஜித்தை தவிர வேறு யாருமில்லை.. அது ஒரே சாதாரண மீட்டிங் ஆகத்தான் இருந்தது அப்போது அஜீத்திடம் கதை சொல்ல முயற்சித்தேன் ஆனால் அஜித்தோ அப்பொழுது கதை கேட்கவில்லை அதன் பிறகு மீண்டும் அஜித்தை ஒரு தடவை சந்தித்தேன் அப்போது கதை கேட்கவில்லையாம்.
திருப்பதி படத்தின் intro பாடலை பாடினேன் அது அஜித்துக்கு ரொம்ப பிடித்துப்போனது இது போதும் என அஜித்தும் கூறிவிட்டார் மூன்றாவது தடை தான் அஜீத் படத்தின் கதையை கேட்டுவிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார் பின் படம் உருவானது. இந்தப்படத்தில் ஒரு காட்சியில் அஜித் மூஞ்சியில் ரத்தம் சொட்டும் ஷூட்டிங் முடிச்சிட்டு வந்து என்னிடம் எனக்கு மட்டும் ரத்தம் விஜய்க்கும் மட்டும் சந்தனம் என சொல்லி சிரிச்சார். படப்பிட்டிப்பு தளம் எப்போதுமே ரொம்ப ஜாலியாகவும் பாசிட்டிவாக இருந்ததாகவும் அவர் கூறினார்.