லியோ படத்திற்கு 7 மணி காட்சி.? ரசிகர்கள் கொண்டாட்டம்

leo
leo

Leo Movie Special Show: தளபதி விஜய் நடிப்பில் வருகின்ற 19ஆம் தேதி அன்று லியோ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதனால் வெறித்தனமாக ரசிகர்கள் காத்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி உள்ளிட்ட இன்னும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் பான் இந்திய படமாக வெளியாக இருக்கும் நிலையில் இதற்கு  அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்திற்கான டிக்கெட் புக்கிங் சில வாரங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் தொடங்கப்பட்டது அப்படி ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் லியோ தற்பொழுது இதனை விடவும் அதிகமாக வாசம் செய்திருப்பதாகவும் இதனால் தற்பொழுதே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்த டிக்கெட் அநியாய விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில் பெங்களூரில் 2500 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். அதே விலை தமிழ்நாட்டிலும் விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையில் லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது ஆனால் சிறப்புக்காட்சி 9 மணிக்கு தான் திரையிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தனது தலைப்பில் தெரிவித்தது.

இதனை அடுத்து படக்குழு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி வெளியிட வேண்டும் என்பதற்காக அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்தது இதனை அடுத்து 7 மணி காட்சிக்காவது அனுமதிக்க வேண்டும் என படக் குழு அறிவித்த நிலையில் தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியதாம்.

இதனால் படக் குழு மீண்டும் தமிழ்நாடு அரசிடம் 7 மணி காட்சிக்கு பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரியில் லியோ படத்துக்கு 7 மணி காட்சிக்கான அனுமதி கிடைத்துள்ளது. 7 மணி சிறப்புக் காட்சி அனுமதி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் புதுச்சேரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புதுச்சேரி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.