ஒருவேளை சாப்பாட்டுக்கு விஜயகாந்த் சந்தித்த அவமானங்கள்.! ரசிகர்களை கண்கலங்க வைத்த சம்பவம்

Vijayakanth
Vijayakanth

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இன்று பேரையும் புகழையும் சம்பாதித்து இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் கஷ்டப்பட்டதை நினைத்து பார்த்தால் பலருக்கும் கண்கலங்குவீர்கள் அந்த அளவிற்கு பல அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்து இருக்கிறார் குறிப்பாக சாப்பாட்டிற்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.

அப்படி ராதாரவி ஒரு நிகழ்ச்சியில் சாப்பாடுக்காக கஷ்டப்பட்டதை குறித்து கூறியுள்ளார் அதாவது விஜயகாந்த் மற்றும் நாங்கள் எல்லாம் சட்டையில்லாமல் ரோகிணி தியேட்டரில் படுத்து கிடப்போம் அந்த சமயத்தில் பசி வாடி வதைக்கும் ஆந்திராவில் இருந்து சீட்டு விளையாட வருவார்கள் விஜயகாந்த் சீட்டு விளையாண்டு காசு சம்பாதித்து எங்களுக்கு சாப்பாடு போட்டவன் என கூறினார்.

நீ எல்லாத்துக்கும் பாவம் பாக்குற.. அதான் ஏறி மிதிக்கிறாங்க.. மீனாவுக்கு அட்வைஸ் பண்ணிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அதுபோலவே தான் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த போது சாப்பாடுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளார் அது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. விஜயகாந்த் பிரபலமாவதற்கு முன்பாக ஒரு திரைப்படத்தின் சூட்டிங்கில் மேக்கப் போட்டுவிட்டு அவர் தயாராக இருந்து உள்ளார் ஆனால் ஹீரோயின் வர தாமதமானதால் தனக்கு பசி எடுக்க சாப்பிட போய்விட்டாராம் இதனை அறிந்திருந்த தயாரிப்பாளர், ஹீரோயின் வருவதற்குள் என்ன அவசரம் என கோபத்தில் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா.! 11 வருடம் கழித்து தனுஷ் போட்ட எமோஷனல் பதிவு..

இப்படி பல அவமானங்களை சந்தித்த விஜயகாந்த் விசு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்த போது பசி எடுத்துவிட்டது உடனே சாப்பாட்டை மேலே கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். இவர் பெரிய இவரு கீழே வந்து சாப்பிட மாட்டாரா என விஜயகாந்த காதுபட பேசியிருக்கிறார்கள் இப்படி பல  கஷ்டப்பட்டதை கடந்து தான் விஜயகாந்த் தான் பெரிய நடிகராக மாறினார்.

பிறகு தன்னுடைய படங்களில் நடிக்கும் டாப் ஹீரோ முதல் லைட் மேன் வரை தன்னால் முடிந்த உதவிகளை செய்ததோடு மட்டுமல்லாமல் கறிவிருந்து சாப்பாடு போட்டார். அதை அவர் தொடர்ந்தும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட விஜயகாந்த் தற்போது உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.