சமீப காலமாக விஷால் எது செய்தாலும் அது ட்ரோலாக மாறிவிடுகிறது. ஏனென்றால் அவர் மீடியாவில் பேசும் எல்லா விஷயங்களும் கண்டன்டுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. அரசியலுக்கு வரப்போகிறேன் என ஆரம்பித்து அவர் செய்யும் காமெடி எல்லாம் வேற ரகம்.
ஏற்கனவே நடிகர் சங்க தேர்தலில் அவர் கொடுத்த அலப்பறையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதேபோல் தன்னை ஒரு விஜயாக ஆழ் மனதில் பதிய வைத்துக் கொண்ட அவர் தேர்தலின் போது சைக்கிளில் வந்து சிரிப்பு மூட்டினார்.
இதற்கு முன்பு விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதைத்தான் விஷால் கடந்த தேர்தலில் ஃபாலோ செய்தார். ஆனால் விஜய் அளவுக்கு எந்த மீடியாவும் அவரை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
அதன் பிறகு விஜய் கட்சி ஆரம்பித்ததும் இவரும் பதிலுக்கு நானும் அரசியலுக்கு வரப்போகிறேன் என கூறினார். இப்போது பார்த்தால் நடிகர் சங்க செயற்குழு கூட்டத்திற்கு அவர் சைக்கிளில் வந்து அலப்பறை கொடுத்துள்ளார்.
இதைப் பார்த்த இணையதள வாசிகள் அவரை கிண்டல் அடித்து வருகின்றனர். தன்னை ஒரு குட்டி பகவதியாக நினைத்துக் கொண்ட விஷால். அவர் ஆழ்மனதில் யாரோ இப்படி ஒன்றை சொல்லி நம்ப வைத்திருக்கிறார்கள் என பங்கம் செய்து வருகின்றனர்.