இந்த மாதிரியான படம் பார்க்கும் ஆம்பளைங்க.. வீட்டுல இப்படித்தான் இருப்பாங்க… சுந்தர் சி ஓபன் டாக்.!

sundar.-c
sundar.-c

இயக்குனர் சுந்தர் சி உன்னை தேடி என்ற திரைப்படத்தை இயக்கி சினிமா உலகில் கால் தடம் பதித்தார் முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். அந்த வகையில் ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் போன்ற சிறந்த நடிகர்களை வைத்து சூப்பரான படங்களை கொடுத்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார்.

ஒரு கட்டத்தில் தானே படங்களில் இயக்கி நடிக்கவும் செய்தார்.
தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும் நடிகராகவும் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்த இவர் அண்மைக்காலமாக தனது ரூட்டை மாற்றி தொடர்ந்து பேய் படங்களை கொடுத்து அசத்தி வெற்றி பெறுகிறார். அந்த வகையில் இவர் இயக்கி நடித்து வரும் அரண்மனை சீரிஸ் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சுந்தர் சி பேட்டி ஒன்றில் அரண்மனை படம் குறித்து பேசினார் அப்பொழுது அவரது மனைவி குஷ்பூ அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். குஷ்பூ நீங்கள் பேய் படங்களை இயக்கி வருகிறீர்கள்.
இரவு நேரத்தில் தனியாக தூங்கும் போது பயப்படாமல் இருக்கிறீர்களா என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் சொன்னது நான் ஒரு பேய் படம் எடுக்கிறேன். என்றால் அது சம்பந்தமாக பல பேய் படங்களை பார்ப்பது பற்றி பேசுவது என தொடர்ந்து அது பற்றி நிறைய அலசி ஆராய்வோம் அப்படியெல்லாம் செய்துவிட்டு இரவு நேரத்தில் தனியாக தூங்கும் போது நிச்சயமாக எனக்கும் அந்த பேய் ஞாபகங்கள் எல்லாம் வந்து போகும் அதனால் நான் தனியாக படுக்கவே மாட்டேன்.

எல்லோருடனும் தான் படுப்பேன் நீ இல்லை என்றால் பிள்ளைகளை கூப்பிட்டு எனது பக்கத்தில் படுக்க சொல்வேன் என கூறினார். இந்த மாதிரியான பேய் படம் எடுக்கும் இயக்குனரும் சரி, பார்க்கும் ஆம்பளைங்களும் சரி தனியாக படுத்து தூங்க மாட்டார்கள் அவர்களுக்கும் பயம் இருக்கும் அதேபோல் தான் தனக்கும் என வெளிப்படையாக பேசினார் சுந்தர். சி