18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தை பார்க்கலாம் – என்ன சான்றிதழ்.? ரன்னிங் டைம் எவ்வளவு நேரம் தெரியுமா.?

surya
surya

நடிகர் சூர்யா ஜெய்பீம் திரைப்படத்தை வெற்றிகரமாக கொடுத்துவிட்டு அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திலிருந்து பல்வேறு பாடல்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவையே வெளியாகிய வண்ணமே இருக்கின்றன.

இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் திரையரங்கில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக பல்வேறு சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டுள்ள அந்த வகையில் அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்த்து வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு முன்பாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சற்று வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது இந்த திரைப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை குறித்து எடுக்கப்பட்ட படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாகும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்து உள்ளது இந்த நிலையில் இந்த படம் தணிக்கைக் குழுவினருக்கு சென்று தற்போது வெளிவந்துள்ளது அவர்கள் U/A  சான்றிதழை வழங்கியுள்ளனர்.

மேலும் அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கூட  இந்த படத்தை பார்க்கலாம் என கூறப்படுகிறது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின்  ரன்னிங் டைம்  தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.