நடிகர் கமலஹாசன் சின்னதாக சான்ஸ் கிடைத்தால் போதும் நடிகைகளுக்கு கிஸ் அடித்து விடுவார் என்றும் அதனால் பல நடிகைகள் பலருடன் நடிக்க பயந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் பல திறமையை கொண்ட வித்தகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமலஹாசன். இவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை என உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் வலம் வருகிறார். இசை, நடிப்பு, இயக்கம், நடனம், என எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடியவர் அதேபோல் சினிமாவில் புதுப்புது விஷயங்களை புகுத்துவதில் வல்லவர். சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் கமலஹாசன் இன்றளவும் பிசியான நடிகராக வலம் வருகிறார்.
இப்படி கமலஹாசனை பற்றி புகழ்ந்து பல விஷயங்கள் இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் சர்ச்சைக்குரிய விஷயங்களையும் கமலஹாசன் சிக்கி உள்ளார் அந்த வகையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் கமலஹாசன் முத்தத்தால் தான் மார்க்கெட்டை இழந்தார் என கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் அவருடன் நடிக்க பயந்த நடிகைகள் பற்றியும் அந்த பேட்டியில் கூறினார்.
மேலும் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது ஹீரோயின்களுடன் மிகவும் நெருக்கமாக பழகுவதில் கமலஹாசன் வல்லவர் அதுமட்டுமில்லாமல் காதல் மன்னன் ஜெமினி கணேசனையே ஓவர் டேக் செய்வார். கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக வேண்டும் என்பதற்காகவே மிகவும் நெருங்கி பழகுவார் அது மட்டும் இல்லாமல் சான்ஸ் கிடைச்சா போதும் உடனே கிஸ்ஸும் அடிச்சிடுவார் கமலஹாசன் திரைப்படங்களில் முத்த காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும் அதுவும் உதட்டோடு உதடு வைத்து லிப் லாக் காட்சிகள் தான் இடம் பெறும்.
ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் கமலஹாசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் அதுவே போகப் போக மிகப்பெரிய தலைவலியாக மாறியது இவர் படத்தில் முத்த காட்சிகள் இருப்பதால் பெண்கள் படத்திற்கு வர மறுத்தார்கள் அதேபோல் ரஜினி எந்த ஒரு சர்ச்சை காட்சிகளிலும் நடிக்காமல் இருந்ததால் அவர் திரைப்படத்தை பார்க்க பெண்கள் கூட்டமாக சென்றார்கள் இதனால்தான் ரஜினிக்கு மார்க்கெட் அதிகரித்தது கமலஹாசனுக்கு மார்க்கெட் குறைந்தது.
அதேபோல் அப்பொழுது இருந்த நடிகைகள் பலரும் கமலுக்கு ஜோடியாக நடிக்க விரும்பினார்கள் ஆனால் நடிகை நதியா மட்டும் எத்தனை லட்சம் எத்தனை கோடி கொடுத்தாலும் கமலுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார் தமிழ் சினிமாவில் நடிகை நதியா மட்டும் நீச்சல் உடை அணிந்து ஆபாசமாக நடிக்காதவர் அதுமட்டுமில்லாமல் எல்லை மீறிய காதல் காட்சிகள் இருந்தால் டைரக்டாக சொல்லிவிடுவார் அந்த அளவு மிகவும் கவனமாக நடித்து வந்ததன் காரணமாக தான் அவர் கடைசி வரை கமலஹாசன் உடன் ஜோடியாக நடிக்காமல் இருந்துள்ளார்.