குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பவித்ரா போட்ட முதல் பதிவு.!!நெகிழ வைக்கும் ட்வீட்!!

kuk with comali
kuk with comali

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் காமெடியை மையமாக வைத்து காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருவதால் ரசிகர்கள் மிக ஆர்வமாக நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு என்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் நிகழ்ச்சிகள் பெரும் ஆதரவை கிடைத்ததால் தற்போது இரண்டாவது சீசன்  ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது சீசனில் அஸ்வின், பாபா மாஸ்டர், பவித்ரா,ஷகிலா, தர்ஷா குப்தா, தீபா,கனி, மதுரை முத்து, ரித்திகா போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்.அதில் தர்ஷா குப்தா, தீபா, மதுரைமுத்து, ரித்திகா போன்றவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

இந்நிலையில் அஷ்வின்,பாபா மாஸ்டர்,பவித்ரா,ஷகிலா இவர்கள் அனைவரும் மிக கடுமையாக போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் பாபா மாஸ்டர் சென்ற வாரம் இமினிட்டி பேண்டை வென்றார். எனவே இவர் இந்த வாரம் வெளியேறாமல் காப்பாற்றப்பட்டார்.

இறுதிப்போட்டியில் பவித்ரா மற்றும் அஸ்வின் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சமைத்தார்கள். அஸ்வின் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் பவித்ரா இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பவித்ரா தற்போது எனக்கு கிடைத்துள்ள புகழுக்கு புகழ் தான் காரணம் அவர்தான் என்னுடன் சேர்ந்து சமைக்கும் பொழுது ரொமான்ஸ் செய்வது போல காமெடி செய்து பிரபலமடைய செய்தார். அதனாலேயே பலருக்கு என் பெயரைத் பவித்ரா என்பது தெரியவந்தது.

இந்நிலையில் பவித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியப் பிறகு தனது முதல் பதிவை பதிவிட்டுள்ளார்.அதில் இது மிகவும் அற்புதமான ஒரு பயணம் உங்களின் அளவுகடந்த அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி மக்களே.குக் வித் கோமாளி இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார் .