வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற “தென்றல் வந்து என்னைத்தொடும்” சீரியல் நடிகை பவித்ரா – வெளியான சூப்பர் தகவல்.

pavithra
pavithra

சினிமாவில் நடிக்கும் பெண்கள் பெரும்பாலும்  மாடலிங் துறையை தேர்வு செய்து  அதன் பின் கிடைக்கின்ற வாய்ப்புகளைஎல்லாம் பயன்படுத்தி அதன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி அவர்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இதன் மூலம் வெளித்திரை வாய்ப்பை பெறுகின்றனர். அதுபோல் தற்போது சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் பவித்ரா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் துணை கதாபாத்திரமாக நடித்து இதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்.மேலும் ஈரமான ரோஜாவே என்ற தொடரில் ஹீரோயினாக அறிமுகமாகிய தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக் கொண்டார் பவித்ரா.

டாப் சீரியல்களில் ஒன்றான இந்த ஈரமான ரோஜாவே சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 800 எபிசோடுகளை கடந்து சிறப்பாக ஒளிபரப்பாகி முடிவடைந்தன.இந்த சீரியல் முடிவடைந்தவுடன் மேலும் தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியிலே தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலில் வினோத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த தொடரில் இவர் மிகவும் தைரியமான பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இதுபோக இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வழக்கமாக வித விதமான  புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.இதன் மூலம் ரசிகர்கள் பலரும் இணையதள பக்கத்தில் இவரை பின் தொடர்ந்து வருகின்றன.

அதுபோக இவர் ரசிகர்களிடமும் அப்பப்போ லைவில் உரையாடி வருவார். இந்த நிலையில் தற்போது இவர் பற்றி வெளிவந்த செய்தி என்னவென்றால் பவித்ரா விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் என்றும் அதன் அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது.