தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஓடிக்கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது நடித்து உள்ள “பத்து தல” திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்து பின் ஹீரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் 100 கோடி வசூல் செய்த நிலையில் அடுத்த படமான பத்து தல திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது அண்மையில் இந்த படத்தின் டிரைலர், போஸ்டர்கள் போன்றவை வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை கிருஷ்ணா இயக்கி உள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகியுள்ளதால் ஆக்ஷன், சென்டிமென்ட் அதிகமாக இருக்கும் என தெரிய வருகிறது. பத்து தல படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து கௌதம் கார்த்தி, ப்ரியா பவானி சங்கர்..
அனு சித்ரா, கௌதம் வாசுதேவ் மேனன், Teejay arunasalam, joe malloori, கலையரசன் ரெடின் கிங்க்ஸ்லே மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்தியுள்ளனர்.இப்படி இருக்கின்ற நிலையில் முக்கிய சினிமா பிரபலம் தனஜெயன் பத்து தல திரைப்படம்..
குறித்து சில தகவல் வெளியிட்டுள்ளார் அதில் அவர் சொன்னது.. பத்து தல திரைப்படம் முழுக்க முழுக்க சாலிடு எமோஷன் அண்ட் பெர்பார்மன்ஸ்.. நிச்சயம் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என கூறியுள்ளார் மேலும் செகண்ட் ஆப் சூப்பர் என தனஜெயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார். இதோ அந்த பதிவை நீங்களே பாருங்கள்.