பத்து தல திரைப்படத்தின் “முதல் நாள்” வசூல் மட்டுமே இத்தனை கோடியா.? சந்தோஷத்தில் நடிகர் சிம்பு

pathu thala
pathu thala

திரை உலகில் வெற்றி கண்ட படங்களை பிற மொழிகளில்  ரீமேக் செய்யப்படுவது வழக்கம் அந்த வகையில் கன்னடத்தில் வெளியான “மஃப்டி” படத்தின் ரீமேக் தமிழில் “பத்து தல” என்ற பெயரில் உருவானது இந்த படத்தை கிருஷ்ணா இருந்தார். சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார் அவருடன் இணைந்து பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக்..

கௌதம் வாசுதேவ் மேனன், சென்ராயன், கலையரசன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபத்திரத்தில் சூப்பராக நடித்து உள்ளனர். படத்தின் டிரைலர், பர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவை வெளிவந்து எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த நிலையில் நேற்று கோலாக்கலமாக பத்து தல திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட் நிறைந்த ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் பத்து தல திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பபலரும் பத்து தல படத்தை பார்த்துவிட்டு மீண்டும் மீண்டும் திரும்பி பார்ப்பதாக சொல்லி வருகின்றனர். அந்த அளவிற்கு படம் சூப்பராக இருக்கிறதாம்.

இதனால் நடிகர் சிம்புவும் சரி, படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் பத்து தலை திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பத்து தலை திரைப்படம் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றுள்ள முதல் நாளில் மட்டும் சுமார் 7 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாம்..

வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது இதை கண்ட ரசிகர்கள் நிச்சயமாக பத்து தல படத்தின் பாசிட்டிவ் விமர்சனம் மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. நிச்சயம் 100 கோடியை தொட்டு பத்து தல சாதனை படைக்கும் என  ஆதரவாக பேசி வருகின்றனர்.