கேரக்டர்களின் போஸ்டர்களை வெளியிட்ட ‘பத்து தல’ பட குழு.!

pathu-thala-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீப காலங்களாக தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த திரைப்படத்திற்கு பிறகு தற்போது இவர் பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தினை இயக்குனர் ஒபலி என் கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் கலையரசன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வருகின்ற 30ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. மேலும் தற்பொழுது பட குழுவினர்கள் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காமித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

pathu thala 1
pathu thala 1

மேலும் இந்த படத்தில் ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷா பாடல் ஒன்று இருக்கு ஐட்டம் நடனம் ஆடி இருக்கும் நிலையில் அந்த பாடல் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது இந்நிலையில் தற்போது இந்த படத்தின் கதாபாத்திரங்களை பட குழு அறிமுகம் செய்துள்ளது.

pathu thala

அந்த வகையில் அருண்மொழி என்ற கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார் பிறகு இன்பன் என்ற கதாபாத்திரத்தில் சவுந்தரும், ஆராதனா என்ற கதாபாத்திரத்தில் ஹர்ஷிதாவும் நடித்துள்ளனர் எனவே இவர்களுடைய கதாபாத்திரம் போஸ்டர்களை பட குழு வெளியிட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.