முதல் நாளை விட 2ஆம் நாளில் அதிகரித்திருக்கும் ‘பத்து தல’ படத்தின் வசூல்.!

pathu-thala
pathu-thala

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிம்பு சமீப காலங்களாக தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவினை பெற்று வரும் திரைப்படம் தான் பத்து தல. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்பு ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை தந்து வந்த நிலையில் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் நிலையில் இரண்டு நாட்களாக ரசிகர் பத்து தல திரைப்படத்தினை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த Mufti என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்திற்காக சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் பிட்டாக இருக்கிறார்

மேலும் சிம்புவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியினை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது சிம்புவை கொண்டாடி வருக்கின்றனர். மேலும் இதற்கு மேல் சிம்பு தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் முதல் நாளில் இந்த படம் 12 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டது. மேலும் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் முதல் நாளே ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது.

இப்படிப்பட்ட நிலையில் பத்து தல திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவலை பட குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இரண்டாவது நாளில் சிம்புவின் பத்து தல திரைப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 18 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் வரும் நாட்களில் மேலும் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.