பார்வையாலே ரசிகர்களை மிரட்டும் பசுபதி..! முதன்முதலாக தனது நடிப்பின் ரகசியத்தை உடைத்த சார்பாட்ட வாத்தியார்..!

pasupathi-2
pasupathi-2

தமிழ் திரை உலகில் ஒரு நேரத்தில் பசுபதி என்ற பெயரைக் கேட்டாலே நடுங்காதே ஆட்களே கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு தன்னுடைய வில்லத்தனமான நடிப்பின் மூலமாக ரசிகர்களை மிரட்டியவர்தான் நடிகர் பசுபதி.

அந்தவகையில் இவர் பட்டாசு பாலு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததை இதுவரை யாராலும் மறக்க முடியாத கதாபாத்திரமாக அமைந்துவிட்டது. ஆரம்பத்தில் வில்லனாக பல்வேறு திரைப்படங்களில் மிரட்டிய பசுபதி தற்போது குணச்சித்திர வேடத்திலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் பசுபதி வெயில் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இவ்வாறு இந்த திரைபடத்தில் சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கி  தான் ஒரு சிறந்த கதாநாயகன் என்பதை நிரூபித்துள்ளார்.

இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நமது நடிகர் அதன் பிறகு கதாநாயகனுக்கு தந்தை போன்ற கதாபாத்திரத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் கூட வாத்தியாராக நடித்துள்ளார்.

அந்த வகையில் பசுபதி சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த காட்சிகள் அனைத்தும் இன்று மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. அந்தவகையில் இத்திரைப்படத்தில் டயலாக்குகளை வைத்து சமூக வலைத்தளத்தை அதிரவைத்து வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்கள்.

pasupathi-1
pasupathi-1

இந்நிலையில் பசுபதியிடம் பேட்டி ஒன்றில் உங்கள் நடிப்பின் ரகசியம் என்னவென்று கேட்டுள்ளார்கள் அதற்கு பதிலளித்த பசுபதி புருவத்தை உயர்த்தி பார்த்தால் நான் வில்லன் கண்ணை சுருக்கி பார்த்தால் நான் ஹீரோ இவ்வளவு தான் என்று கூறியுள்ளார்.