தமிழ் சினிமாவில் தற்போது அறிமுகமாக வது மிகவும் எளிதான காரியம் ஆகிவிட்டது ஆனால் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கால்தடம் பதிக்க வேண்டுமென்றால் திறமை மட்டும் இருந்தால் பத்தாது அதைத் தாண்டி பல தடைகளை தகர்த்து எறிய வேண்டும். ஆனால் தற்பொழுது சின்னத்திரை மூலமாகவே பலரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தியும் தனது திறமைகளை நிரூபித்து சினிமாவில் வாய்ப்பை தேடி வருகிறார்கள் இந்த நிலையில் குடும்ப கதைகளை வைத்து பல திரைப்படங்களை இயக்கி வந்தவர் பாண்டிராஜ் இவர் 2009ம் ஆண்டு பசங்க திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் தேசிய விருதையும் தட்டிச் சென்றது.
இந்த பசங்க திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் விமல் அதேபோல் இவருக்கு ஜோடியாக வேகா டோமாட்டியா அதுமட்டுமில்லாமல் ஸ்ரீராம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் சோபி கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் வேகா.
இவர் முதன்முதலாக சரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் அதன் பிறகு பசங்க வானம் ஆகிய தமிழ் திரைப்படத்திலும் நடித்தது மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சத்தீஸ்கரில் பிறந்தவர் சிறுவயதில் இருந்தே அதிக ஆர்வம் நடிப்பில் இருந்ததால் மாடலிங் துறையில் சிறிது காலம்பணியாற்றினார்.
அதன்பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரு சில திரைப்படங்களில் நடத்துவந்தார் பசங்க திரைப்படத்தில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்ததால் இவரை பலரும் குடும்ப பெண்ணாக பார்த்தார்கள் ஆனால் இந்த நிலையில் தற்போது மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார் இதோ அவரின் புகைப்படம்.