மாமியாருக்காக வரமிளகாயை அரைத்து மூஞ்சில் பத்து போட்டுக்கொண்ட பார்வதி..! இதெல்லாம் ஒரு பொழப்பு என கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

parvathy-2

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைந்ததுதான் செம்பருத்தி சீரியல்.  அந்த வகையில் இந்த செம்பருத்தி சீரியலில் மாமியாருக்காக பார்வதி பல்வேறு பரிகாரம் செய்துள்ளார்.

அந்த வகையில் இவர் செய்த பரிகாரங்களை லிஸ்ட் போட்டு பார்த்தால் நமக்கே தலை சுற்றி விடும். இந்நிலையில் அகிலாண்டேஸ்வரிக்கு நவகிரக தோஷம் ஏற்பட்டு உள்ளதாக குருஜி அவர்கள் கூறியிருந்தார். இதனால் குடும்பத்தில் ஏகப்பட்ட கஷ்டங்களும் இன்னல்களையும் சந்திக்க போகிறீர்கள் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு குருஜி கூறியதன் காரணமாக கதாநாயகி ஆத்திரத்தில் கோயிலுக்கு சென்று அம்மனிடம் முறையிட்டுள்ளார் பொதுவாக கதாநாயகி கோயிலுக்கு வரும் பொழுது யாரேனும் வந்து ஏதாவது பரிகாரம் சொல்வது வழக்கம் அந்த வகையில் இந்த சீரியலில் யாரும் வரவில்லை.

parvathy-1
parvathy-1

இதனை பார்த்த செம்பருத்தி உடனே அருகில் உள்ள கூடையில் இருந்த வரமிளகாயை எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து தன்னுடைய உடல் முழுவதும் பூசிக்கொண்டு அம்மனிடம் முறையிட்டார் அப்போது மீதமுள்ள இடமான கண்களில் அந்த மிளகாய் சாந்தை பூசும்போது ஒரு திருப்பம் ஏற்பட்டன.

பொதுவாக சீரியலில் எந்த ஒரு கதாநாயகியும் இப்படி ஒரு பரிகாரம் செய்தது கிடையாது அது மட்டும் இல்லாமல் அப்படியே செய்திருப்பின் மாமியாருக்காக இவ்வளவு இறங்கி செய்தது மக்கள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது.  அதுமட்டுமில்லாமல் இந்த காட்சியை பார்த்து பல்வேறு ரசிகர்களும் இதெல்லாம் கொஞ்சம் உங்களுக்கே ஓவரா இல்லையா எனகேட்டது மட்டுமில்லாமல் பாசத்தையும் மரியாதையும் வெளிகாட்டுவதற்கு இது ஒரு வழியா என கேள்வி எழுப்பி உள்ளார்கள்.