ஷகிலா விடம் virginity பற்றி ஓபன் ஆக கேள்வி கேட்ட vj பார்வதி. பதிலுக்கு திருப்பி கேட்ட ஷகிலா பார்வதியின் பதில் என்ன தெரியுமா.?

pavithra
pavithra

பலரும் சமூக வலை தளத்தை பயன்படுத்தி பிரபலமடைய நினைப்பது தெரிந்த விஷயம்தான். அதிலும் பொதுமக்களிடம் கருத்து கேட்பதில் பல ஊடகங்கள் முன்னுரிமை காட்டி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல  ஊடகத்தில் பணியாற்றி வரும் Vj பார்வதி பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

parvathi
parvathi

இவர் சமீபத்தில் ஷகிலாவை நேர்முக பேட்டி ஒன்றை எடுத்துள்ளார்.  மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள் அதை தான் என் புத்தகத்தில் எழுதியுள்ளேன்.  இதைதான் படமாக எடுத்து இருக்கிறார்கள் எனக் கூறி அதிர வைத்தார்.

இந்த நிலையில் vj பார்வதி அவர்கள் ஷகிலாவிடம் பேட்டி ஒன்றை எடுத்துள்ளார் அப்பொழுது ரசிகர்கள் கமெண்ட் செய்த சில கேள்விகளுக்கு ஷகிலா பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் நீங்கள் என்ன வேணாலும் நியாயப்படுத்தி சொல்லலாம் ஆனால் பணத்திற்காக நீங்கள் செய்தது தவறுதான் நீங்கள் நிறுத்தி இருக்க வேண்டுமென vj பார்வதி கமெண்டை படித்தார்.

இந்தக் கேள்வியை கேட்ட உடன் சகிலா டென்ஷன் ஆனார் உடனே ஷகிலா கூறியதாவது உனக்கு என்ன பிரச்சனை நீ எனக்கு பணம் தர போகிறாயா நான் வாழவேண்டும் நான் ஒரு குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் எனக்கு உதவி செய்வார்கள் இது என்னுடைய உடல் அதை நான் காட்டினேன் அதுவும் என்னுடன் இருக்கும் மற்றவர்களை காப்பாற்றுவதற்காக தான் என்னுடைய சம்மதத்துடன் அதை செய்தேன் என சரியான பதிலடி கொடுத்தார்.

அதேபோல் இன்னொரு ரசிகர் நீங்கள் உடல் எடையைக் குறைத்தால் அழகாக இருப்பீர்கள் என கேட்டிருந்தார் அதற்கு பதிலளித்து ஷகிலா நான் இப்ப உடம்பு குறைச்சா எனக்கு என்ன ஹீரோயின் சான்ஸ் கொடுக்க போறாங்களா. 43 வயது ஆகிவிட்டது நான் ஹீரோயினாக நடிக்க முடியாது அப்புறம் எதற்காக நான் கஷ்டப்பட்டு ஜிம் சென்று உடம்பை குறைக்க வேண்டும் என  பதில் அளித்தார்.

கடைசியாக பார்வதி அவர்கள் ஷகிலா அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பினார் அதாவது உங்களுடைய அகராதியில் விர்ஜினிட்டி என்றால் என்ன என கேள்வி கேட்டிருந்தார் மிகவும் கடினமான கேள்வி என பார்வதியைப் பார்த்து இதற்கு நீ பதில் கூறு பார்க்கலாம் எனக் கூறினார். அதற்கு பதில் அளித்த பார்வதி மற்றவர்களைப் பொருத்தவரை கன்னித்தன்மையை இழப்பதுதான்  என கூறுகிறார்கள் என்னை பொருத்தவரை மனதாலும் உடலாலும் எப்பொழுது நாம் அனைத்தையும் இழக்கிறோமோ அதுதான் கன்னித்தன்மை எனக் கூறினார்.

மீண்டும் ஷகிலா கூறியதாவது அதில் உடல் சம்பந்தப்பட்ட விஷயம் என்று பார்த்தால் நான் 15 வயதிலேயே ஷாருக்கான் படம் பார்த்தேன் அதில் ஷாருக்கானை பார்த்தவுடன் அவர் மீது எனக்கு ஈர்ப்பு வந்துவிட்டது நீ சொன்ன மாதிரி அப்போவே நான் என் கன்னித்தன்மையை இழந்து விட்டதாக தான் கணக்கு. அந்த காலத்தில் அப்படித்தான் இருந்தார்கள் ஆனால் அப்படி இப்பொழுது கிடையாது பெண்களால் கட்டுப்படுத்த முடிவது கிடையாது எங்கே பெத்தவங்க பேச்சைக் கேட்கிறார்கள் ஆனா பாதுகாப்பா இருப்பது தவறு கிடையாது என கூறி முடித்தார்.