சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் பலரிடம் இருக்கிறது, எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதாவது ஒரு வழி கிடைக்காதா அந்த வழி மூலம் நம் திறமையை நிரூபிக்க முடியாதா என போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை வடபழனி சாலையோரம் அழுக்குப் படிந்த கிழிந்த உடையுடன், தலைமுடி நீளமாக கையில் பேப்பர் பேனாவுடன் இருக்கும் ஒருவர் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்கள். அவரிடம் சென்று விசாரித்த பொழுது தன்னுடைய கதையையும் கவிதைகளையும் திருடி விட்டார்கள் எனக் கூறினார் மேலும் பல கவிதைகளை எழுதி வைத்திருந்தாராம்.
சிம்ரனின் தங்கை மோனல் இவர் முதன்முதலில் குணா நடித்த பார்வை ஒன்றே போதுமே என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார், பார்வை ஒன்றே போதுமே திரை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் குருநாதன், அவர்தான் தற்பொழுது தெருத்தெருவாக பிச்சை எடுக்கும் நிலைமையில் இருக்கிறார்.
இவருக்கு பார்வை ஒன்றே போதுமே என்ற திரைப்படத்தில் வாய்ப்பு வாங்கி தந்தது சிம்ரன் தான் என வதந்திகள் பரவி வருகிறது, குருநாதன் பட வாய்ப்புக்காக பலமுறை தேடி அலைந்து திரிந்து உள்ளார், நாள் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் சாப்பிட வழியும் இல்லாமல் பிச்சைக்காரர் போல் கிடந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பார்வை ஒன்றே போதுமே திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை இந்த நிலையில் அவரின் நண்பர் ஒருவர் குருநாதரை சொந்த ஊரான திருச்சி மணப்பாறை அழைத்து சென்றுள்ளார் இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.