2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் பருத்திவீரன். இந்த திரைப்படத்தில் கார்த்தி, பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பலர் நடித்திருந்தார்கள். கார்த்தி அவர்களுக்கு அறிமுக திரைப்படம் என்பதால் பெரிதாக ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் இந்த பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி கார்த்திக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்தது. அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டுள்ளது, பருத்திவீரன் திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.
மதுரை மண்வாசத்தையும், வீரத்தையும், திமிரையும், கோபத்தையும் கண் முன் கொண்டு வந்தவர் இயக்குனர் அமீர். படத்தில் நடித்த நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாகவே செதுக்கிய அமீர் மதுரை பேச்சின், நடை, உடை, பாவனை தோரணை என பிசிறு தட்டாமல் ஒட்டுமொத்தத்தையும் திரையில் காண்பித்து இருப்பார்.
மேலும் ஒரு விழாவில் பருத்தி வீரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி இது உண்மையாவே கார்த்தியின் முதல் திரைப்படமா என்று யோசித்தேன் என கூறினார் அந்த அளவு பருத்திவீரன் கதாபாத்திரத்தில் கார்த்தியின் நடிப்பு வேற லெவலில் நடித்திருந்தார் இன்றும் பிரியாமனியை தமிழ் சினிமா ரசிகர்கள் முத்தழகு என்றுதான் அடையாளம் கொள்வார்கள் அந்த அளவு பிரியாமணியின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டது.
பாடல் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் மக்கள் என்றும் பார்த்து வியக்கக்கூடிய படமாக பருத்தி வீரன் இருந்து வருகிறது இந்த திரைப்படத்தில் அறியாத வயசு புரியாத மனசு பாடலில் சிறு வயது முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியை பலரும் மறந்திருக்க மாட்டார்கள் அந்த பாடலில் வரும் சிறு வயது முத்தழகு ரீசன் போட்டோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிறு வயது முத்தழகா இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.