பொண்டாட்டி ராஜ்ஜியம், சந்தோஷம் ஆகிய திரைப்படங்களில் நடித்து நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் சரவணன். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் தான் பருத்திவீரன்.
இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த கார்த்தியின் சித்தப்பாவாக சரவணன் நடித்திருப்பார் இவர் சமீபத்தில் அமைச்சர் தாமோ அன்பரசனை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் சென்னை முகலிவாக்கத்தில் வீடு வாங்கியதாகவும் இந்த வீட்டை வாங்கி கொடுத்த புரோக்கர் கார் பார்க்கிங் பகுதியில் கடை கட்டி விட்டதாகவும் இது குறித்து கேட்ட பொழுது வீடு வாங்குவதற்கு முன்பே அந்த கடை இருந்தது எனவும் புரோக்கர் கூறுகிறார் இந்த பிரச்சனையை முடித்து தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சரவணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்பொழுது தனக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக அவரே அந்த நிகழ்ச்சியில் கூறினார் முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்பதால் அவருடைய முழு விருப்பத்தினால் கடந்த 2015 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும். இதனால் தனக்கும் தன்னுடைய முதல் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் அதனால்தான் தன்னுடைய முதல் மனைவி வீட்டுக்கு செல்லவில்லை எனவும் கூறினார்.
அந்த நேரத்தை பயன்படுத்தி புரோக்கர் ராமமூர்த்தி தன்னுடைய கார் பார்க்கிங் இருக்கும் இடத்தில் கடையை கட்டி அதற்கு மின் இணைப்பு பெற்றுள்ளார் அது மட்டும் இல்லாமல் இது குறித்து கேட்ட பொழுது கார் பார்க்கிங் ஏரியா அவருடையது எனவும் சண்டை போடுகிறாராம் இது குறித்து கேட்ட பொழுது ராமமூர்த்தியின் மனைவி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியும் இந்த பிரச்சனை அதிகமானதால் அவர் வெட்டுவேன் குத்துவேன் என கூறியதாகவும்.
இந்த பிரச்சனையை எப்படியாவது தீர்த்து வைக்க வேண்டும் என ராமமூர்த்தி மற்றும் அவருடைய மனைவி ஜெயமணியின் மீது புகார் அளித்துள்ளார் சரவணன். இது குறித்து சரவணனின் முதல் மனைவி சூர்யா ராமமூர்த்தியின் மனைவி ஜெயமணி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் சரவணன் சொல்வது எல்லாமே பொய் அவர்கள் தன்னையும் ஏமாற்றி நிறைய பிரச்சனைகளை செய்து வருவதாகவும் ஒரு பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு தன்னிடம் பிரச்சனை செய்ததாகவும் சரவணன் தனக்கு இன்னும் விவாகரத்தை கொடுக்கவில்லை எனவும் அதன் பிறகு எப்படி இரண்டாவது திருமணம் செய்தார் எனவும் பல கேள்விகள் கேட்டுள்ளார் முதல் மனைவி.
அதேபோல் அவர் சொன்ன முகலிவாக்கம் பகுதியில் அவருக்கு எந்த ஒரு பங்கும் கிடையாது இங்கு வந்து ரவுடிசம் செய்து வருவதாகவும் அந்த வீடு தன் சம்பாதித்த பணத்தில் வாங்கியது எனவும் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் அந்த வீட்டை அவர் பெயரில் ரிஜிஸ்டர் செய்தது தான் மிகப்பெரிய தவறு எனவும் இந்த வீட்டிற்காக 12 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் மீதி 36 லட்சம் லோன் போட்டு நான் தான் இஎம்ஐ கட்டி வருவதாகவும் முதல் மனைவி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்ட நிலையில் தான் சோறு போட்டதாகவும் இது குறித்து பிக்பாஸில் கூட கூறியிருந்தார் என தெரிவித்துள்ளார் தற்பொழுது இது விஸ்வரூபம் எடுத்துள்ளது.