ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எலும்பும் தோலுமாக மாறிய பருத்திவீரன் முத்தழகு.! வைரலாகும் புகைப்படம்.

priyamani
priyamani

சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு மிகமிக முக்கியம் என்று நினைப்பது அவர்களின்உடல் கட்டுக்கோப்பு தான். ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறிவிடுகிறார்கள். ஆனால் திருமணத்திற்கு முன்பு அவர்கள் மிகவும் அழகாக தங்களுடைய உடற்கட்டு கோப்பை கவனமாக கவனித்து வருவார்கள்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் பிரியாமணி இவர் தெலுங்கு திரையுலகில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த எவரே அதக்காடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை பானு சங்கர் என்பவர் தான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் முதன்முதலாக கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு அது ஒரு கனாக்காலம், மது என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

மேலும் இவர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர் மனதில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தின் மூலம்குடியேறினார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இப்படி பல மொழிகளில் நடித்து பிஸியாக இருக்கும் பிரியாமணி ஒரு காலகட்டத்தில் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பல நடிகைகளுக்கு பட வாய்ப்பே கிடைக்காது ஆனால் நடிகை பிரியாமணிக்கு ஒரு சில பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது.

சமூக வலைதளத்தில்  எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரியாமணி அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம்  வைரல் ஆகி வருகின்றன மேலும் அந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.