தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் இப்பொழுது வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வந்தாலும் ஒரு சில நல்ல கதைகளை தவற விட்டிருக்கிறார் அந்த கதையில் மற்ற பிரபலங்கள் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்து இருக்கின்றனர் அப்படித்தான் ஒரு பிளாக்பஸ்டர் படத்தின் கதையை நழுவ விட்டு பின் விஜய் புலம்பி இருக்கிறார்.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் இயக்குனரும், நடிகருமாக ஓடிக்கொண்டிருப்பவர் அமீர். இவர் 2007 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து எடுத்த திரைப்படம் பருத்திவீரன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரியாமணி நடித்திருந்தார்.
மற்றபடி இந்த படத்தில் சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சுஜாதா சிவகுமார், சமுத்திரக்கனி, சம்பத்ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர் படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பிறகு தான் கார்த்தியின் சினிமா பயணம் அதிகரித்தது எனவும் கூறலாம்.
இப்படிப்பட்ட படத்தை ஒரு நடிகர் தவறவிட்டிருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல தளபதி விஜய் தான் இயக்குனர் அமீர் முதலில் இந்த கதையை விஜயிடம் தான் சொல்லி இருக்கிறார் ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தை அவர் தவறவிடவே பின் கார்த்தி இந்த கதைக்கு ஓகே சொன்னாராம்.
உடனடியாக பருத்தி வீரன் என்ற பெயரில் இந்த படம் உருவாக்கப்பட்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததாம். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இருந்தும் சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல இச்செய்தி பரவி வருகிறது.