நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்திக் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர். பின்பு 2007 ஆம் ஆண்டு அமீர் சுல்தான் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி, சரவணன் கஞ்சா கருப்பு ஆகியோர் நடிப்பில் வெளியாகிய பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியதால் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பருத்திவீரன் திரைப்படத்தை யாராலும் மறந்திருக்க முடியாது அந்த அளவுக்கு மிகவும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதிலும் இந்த திரைப்படத்தில் சிறுவனாக வேட்டி கட்டிக்கொண்டு நடித்த வரை யாராலும் மறந்திருக்க முடியாது.
அந்த அளவு அவரின் பேச்சு இன்னும் ரசிகர்களின் காதில் கேட்டுக் கொண்டுதான் இருக்கும் கருவாச்சி உன்ன தான் என்று கூறும் வசனம் மிகவும் பிரபலம். குட்டிப் பையனாக நடித்தவர் பெயர் விமல் ராஜ் இவர் பருத்தி வீரன் திரைப்படத்தில் குட்டி சாக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பருத்தி வீரன் திரைப்படத்தில் குட்டிப் பையனாக இருந்த இவர் தற்போது என்ன செய்கிறார் என்று பலருக்கும் தெரியாத ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.
குட்டி சாக்கு என்கின்ற விமல் ராஜ் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியதாவது நான் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பக்கத்தில் ஒரு ஒரு சின்ன கிராமத்தில் வசித்து வருகிறேன் சொந்த ஊரில் வேலை இல்லாத காரணத்தினால் அதிகாலையில் மதுரைக்கு வந்து வேலை செய்வேன் இதனைத் தொடர்ந்து நான் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.
படத்தில் நடிக்க வேண்டும் என்றால் யாரை பார்க்க வேண்டும் யாரை கேட்கவேண்டும் என்று தெரியவில்லை அதானல் தெரிந்த வேலையை செய்கிறேன் எனக்கு மாடு கோழிகள் வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் அதனால் ஜல்லிக்கட்டு காளைகள் சண்டை சேவல் வளர்ப்பது ஆகிய வேலைகளை பார்த்து வருகிறேன் என அவர் கூறியுள்ளார்.