பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பே கார்த்தி நடிக்க வேண்டிய திரைப்படம் இதுதான்.! அதுவும் யார் கூட தெரியுமா.?

karthi
karthi

நடிகர் கார்த்தி 2007 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூலிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி மாபெரும் ஹிட் திரைப்படமாக உருவெடுத்தது. இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து சரவணன்,  பிரியாமணி, கஞ்சா கருப்பு என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

தொலைக்காட்சியில் இன்று பருத்திவீரன் திரைப்படத்தை ஒளிபரப்பினால் கூட மக்கள் விரும்பி பார்ப்பார்கள் அந்த அளவு மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது. மேலும் கார்த்திக் நடிப்பில் வெளியாக்கிய பல திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பையும்  நல்ல வசூலையும் பெற்று வருகிறது. முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2d என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தான் தயாரித்திருந்தது படத்தில் பிரகாஷ்ராஜ் சூரி ராஜ்கிரன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள் மேலும் விருமன் திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தானே இசையமைத்திருந்தார்.

மேலும் கார்த்திக் பொன்னியின் செல்வம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இது மணிரத்தினத்தின் கனவு படம் எனக் கூறப்படுகிறது நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் தயாராகியுள்ளது என கூறப்படுகிறது மேலும் செப்டம்பர் மாதம் திரையில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் கார்த்தி இதனை தொடர்ந்து சர்தார் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை பி எஸ் மித்திரன் இயக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இதுவரை கார்த்தி நடிக்காத கதாபாத்திரமான இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் ராஜீஷா விஜயன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

kanda naal muthal
kanda naal muthal

பலருக்கும் தெரியும் கார்த்தியின் முதல் திரைப்படம் பருத்திவீரன் என்று தான் ஆனால் இதற்கு முன்பே கார்த்தி ஒரு திரைப்படத்தை மிஸ் செய்துள்ளார் அதாவது 2005 ஆம் ஆண்டு பிரியா இயக்கத்தில் வெளியாகிய கண்ட நாள் முதல் திரைப்படத்தில் கார்த்தி நடிக்க இருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் பிரசன்னா கதாபாத்திரத்தில் முதன்முதலாக கார்த்தி தான் நடிக்க இருந்தார் அந்த சமயத்தில் கார்த்திக்கு நடிப்பதில் அதிக ஆர்வம் இல்லாததால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டார் அதன் பிறகு தான் பிரசன்னா நடித்தார்.

மேலும் கண்ட நாள் முதல் திரைப்படத்தில் பிரசன்னா  உடன் இணைந்து லைலா ரேவதி கார்த்திக் குமார் லட்சுமி ரெஜினா ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.