Paruthiveeran : 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் பருத்திவீரன் இந்த படம் வெளியாகி இத்துடன் 17 வருடங்களை கடந்துள்ளது. இப்பவும் இந்த படத்தைப் பற்றி பலரும் பேசி வருகின்றனர் காரணம் இந்த படத்தின் ஹிட் மற்றொரு பக்கம் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேலுக்கும் இடையே பிரச்சனையை என்று கூட கூறலாம்..
பருத்திவீரன் படத்தை எடுக்க அமீர் சந்தித்த பண கஷ்டங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை என பாடல் ஆசிரியர் சினேகன் மற்றும் சசிகுமார், சமுத்திரகனி என பலரும் அமீருக்கு ஆதரவு கொடுத்தனர் அதுபோலவே தான் கஞ்சா கருப்பும் அமீர் பட்ட கஷ்டங்கள் குறித்தும் இந்த படம் ஹிட் அடிக்க யார் காரணம் என்பது குறித்தும் சமீபத்தில் பேசி உள்ளார்.
பருத்திவீரன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது கார்த்தியே இல்லையாம் நடிகர் சூர்யாவுக்கு தான் அமீர் இந்த கதையை சொல்லி இருக்கிறார் ஆனால் அந்த சமயத்தில் கார்த்தி மணிரத்தினம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் அவரை ஹீரோவாக ஆக்கலாம் என்று சூர்யாவிடம் அமீர் சொல்ல அப்படிதான் கார்த்தி இந்த படத்தில் கமிட் ஆனாராம்.
இந்த படத்தில் நடிக்கும் போது கார்த்திக்கு எதுவுமே தெரியாது அமீர் தான் கார்த்தியை ஒரு நல்ல நடிகனாக உருவாக்கினார். முதலில் சொல்லுங்க அண்ணா.. சரிங்க அண்ணா.. என அமீர்க்கு கும்பிடு போட்டுக் கொண்டு இருந்தவர் தான் கார்த்தி.. கார்த்தி ஒருவரால் இந்த படம் ஹிட் அடிக்கவில்லை சித்தப்பு, டக்லஸ், முத்தழகு, பிணந்தின்னி, குட்டி சாக்கி என அத்தனை கேரக்டர்களும் சேர்ந்து தான் பருத்திவீரன்.
விஜயின் கோட்டையான கேரளாவில் “லியோ” திரைப்படம் அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?
அவர்கள் அத்தனை பேரும் பணியாற்றியது அமீர் ஒருவருக்காக தான் இந்த படத்தை தயாரித்தது இயக்குனர் அமீர் மட்டும் தான். அந்த சமயத்தில் அவர் பணத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேருக்கும் தெரியும் அவர் மீது இப்படி ஒரு திருட்டு பணியை சுமத்துவது நியாயம் இல்லை என கஞ்ச கருப்பு சொல்லி உள்ளார்.