paruthiveeran actor latest news: கடந்த 2007ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டடித்த திரைப்படம்தான் பருத்திவீரன் இத்திரைப்படத்தை இயக்குனர் அமீர் இயக்கி உள்ளார். இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் தான் கார்த்திக் சினிமாவில் அறிமுகமான திரைப்படம்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றது மேலும் இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்தது மட்டுமல்லாமல். பொன்வண்ணன் சரவணன் கஞ்சா கருப்பு போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.
என்னதான் இந்த திரைப்படம் முழுக்க பல்வேறு காமெடிகளை சூழ்ந்து இருந்தாலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற டீக்கடை காமெடி மட்டும் மறக்கவே முடியாது. அந்த வகையில் இந்தத் திரைப்படத்தில் நடித்த டீ கடை ஓனர் ஆறுமுகம் அவர்களை பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி எடுத்துள்ளார்.
அப்போது அவர் தன்னுடைய சினிமா அனுபவத்தை பற்றி அவரிடம் பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியது என்னவென்றால் நான் அந்த திரைப்படத்தில் நடித்து இதுவரை 15 வருடங்கள் ஆகிவிட்டன. அந்த வகையில் நான் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தாலும் மக்களிடையே நல்ல பிரபலமாகி விட்டேன்.
இவ்வாறு நான் திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு சொந்தமாக ஊரில் ஒரு டீக்கடை இருந்தது அப்பொழுது ஒரு படக்குழுவினர்கள் வந்தார்கள். அதில் ஒருவர் தாடி வைத்துக்கொண்டு என் அருகில் வந்தார் அவர்தான் அமீர் என்று கூறினார்கள் நானும் வணக்கம் ஐயா என்று கூறினேன்.
அவர்கள் வந்தவுடன் காமாட்சி அம்மன் டீ ஸ்டால் கோடை காட்டிவிட்டு நீங்கள் அமர்ந்து கொண்டு எழுதுவது போல் இருந்தது என்று கூறினார்கள். உட்கார்ந்துகொண்டு எழுதுவது போல் இருந்தேன். அப்போது கார்த்திக் சார் வந்தாரு. அவருக்கு முதல் திரைப்படம் என்பதன் காரணமாக அவரை யாருக்குமே தெரியவில்லை. பின்னர் அவர்கள் கூறிய டயலாக்கை நான் பேசி கொடுத்தேன்.
ஆனால் திரைப்படம் வெளிவந்த பிறகு யாருக்குமே என்னை தெரியவில்லை ஆனால் ஒருவர் மட்டும் நீங்கள் தானே அந்த காமெடியில் நடித்தது என்று கேட்டார்கள். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக சைக்கிள் கடை ஒன்று வைத்திருந்தேன்.
அதற்கு முன்பாக நடிகர் சசிகுமார் தாத்தா தியேட்டரில் நான் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் தாமிரபரணி சீமராஜா ரஜினிமுருகன் போன்ற திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் தற்போது எந்த வாய்ப்பும் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பருத்தி வீரன் திரைப்படத்தின் டப்பிங் சென்றபொழுது டப்பிங் வேலை முடிந்த பிறகாக எண்ணெய் மதுரைக்கு அனுப்பி வைக்குமாறு அவருடைய உதவியாளரிடம் கூறியிருந்தார் இயக்குனர் அமீர் அப்பொழுது அவருடைய உதவியாளர் வெறும் 200 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு இது தான் மதுரைக்கு போற பஸ் என காட்டி விட்டு சென்று விட்டார். இத வச்சுக்கிட்டு நான் எப்படி மதுரைக்கு போறது அதனால பாண்டிச்சேரிக்கு போயிட்டு எனக்கு தெரிந்தவர்களிடம் காசு வாங்கிக் கொண்டு அதன் பின்னர் மதுரைக்கு சென்றேன் என கூறியுள்ளார்