பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறாரா.. நடிகை அனிகா – அவரே கூறிய சூப்பர் தகவல்.

anikha
anikha

மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயின்னாக மாறி உள்ளவர் அனிகா சுரேந்தர்.

என்னதான் மலையாள சினிமா வாழ்க்கையில் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தாலும் தமிழில் கிடைத்த வரவேற்பு வேற எங்கேயும் கிடைக்கவில்லை என்பது அவரே நன்கு உணர்ந்து கொண்டார் அதுவும் அஜித்துடன் இரண்டு திரைப்படங்களில் நடிப்பதால் ரசிகர் கூட்டம் மிகப்பெரிய அளவில் அனிகாவை பின்பற்றியது.

அத்தகைய ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள இளம் வயதிலேயே கிளாமரான போட்டோஷூட் நடத்தவும் களமிறங்கினார் அதுவும் அவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது தற்பொழுது சினிமா போட்டோ ஷூட் என எல்லாவற்றிலும் கலந்து கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்.

தற்பொழுது தமிழில் கூட இவர் மாமனிதன் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் இவர் தமிழில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற  செய்தி ஒன்று வெளியாகியது . இதற்கு அனிகா தற்பொழுது விளக்கம்  அளித்துள்ளார்.

அவர் கூறியது : சர்வைவர் நிகழ்ச்சியில் நான் யார் சொன்னது என்றும் அப்படி எல்லாம் கிடையாது எந்த ஒரு ரியாலிட்டி ஷோக்களும் நான் சொல்லவில்லை என கூறியுள்ளார்.