பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததால் தலைகனத்தில் பேசினாரா பார்த்திபன்.?

parthiban
parthiban

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில் தனுஷின் நானே வருவேன் திரைப்படமும் பொன்னியின் செல்வன் திரைப்படம் மோத உள்ளதாக ஒரு பக்கம் தகவல் வந்த நிலையில் இது பற்றி நானே வருவேன் படத்தின் தயாரிப்பாளர் எஸ் தானு அவர்கள் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் தானு கூறியதாவது  தனுஷின் அசுரன் படமும் இதே நேரத்தில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது அதேபோல் நானே வருவேன் திரைப்படத்தை அதே நேரத்தில் வெளியிட வேண்டுமென்று நான் முன்னாடியே முடிவெடுத்துவிட்டேன் அதுமட்டுமல்லாமல் இதை மூன்று மாதத்திற்கு முன்பாகவே வெளியிடுவதற்காக தயாராக இருந்தேன் ஆனால் இது எனக்கு சென்டிமெண்டாக இருக்கும் என்றுதான் இந்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்தோம் என்று கூறியிருந்தார்.

இதே சமயத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது இந்த நிலையில் பொன்னியின் செல்வன் பிரஸ் மீட்டில் பார்த்திபன் அவர்கள் நானே வருவேன் நானே வருவேன் என்று தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தை கிண்டல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

அதற்கு தற்போது பார்த்திபன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். இப்போது நான் பிரஸ் மீட்டில் நானே வருவேன், நானே தான் வருவேன் என்று தனுஷின் நானே வருவேன் படத்தை பார்த்து நான் கலாய்க்கவில்லை எனக்கு சினிமாவை ரொம்ப பிடிக்கும் அது மட்டுமல்லாமல் நான் சினிமா ரசிகர். நான் அந்த படத்தை பார்த்து கலாய்க்கெல்லாம் கிடையாது. என்று ஒரு பேட்டியில் பார்த்திபன் அவர்கள் கூறியுள்ளார்.