சினிமா உலகில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் தொடர்ந்து அதே ரூட்டிலேயே பயணிக்கின்றனர் ஆனால் ஒரு சிலர் மட்டுமே ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி மற்றவற்றிலும் கவனம் செலுத்தி வெற்றியை கைப்பற்றுகின்றனர். அந்த வகையில் நடிகர் பார்த்திபன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு இயக்குனராக பணியாற்றி அதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அவரை துரத்தியது.
ஒரு கட்டத்தில் நடிகர் பார்த்திபன் புதிய பாதை என்ற படத்தை இயக்கி அறிமுகமானார் அதே படத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் படம் வெற்றி படமாக மாறியதால் நடிகர் பார்த்திபன் இயக்குனராக அடுத்தடுத்த படங்களை இயக்கினார். அந்த வகையில் நடிகர் பார்த்திபன் பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, வித்தகன், குடைக்குள் மழை என பல படங்களை இயக்கி அசத்தினார்.
தற்பொழுது கூட சினிமா உலகில் இவர் ஒரு பக்கம் ஹீரோவாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார் மறுபக்கம் படங்களை இயக்கியும் ஓடிக் கொண்டிருக்கிறார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சின்ன பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
அந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக இரவின் நிழல் திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டையும் காணுகிறது. பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தில் அவருடன் இணைந்து பிரகிடா, ரேகா நாயர், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்து உள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் இரவின் நிழல் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது
அதன்படி பார்க்கையில் இரவின் நிழல் படம் ஏழு கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் எந்த ஒரு பெரிய படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்தால் நிச்சயம் இரவின் நிழல் திரைப்படம் இன்னும் சில கோடிகளை அள்ளி சாதனை படைக்கும் என கூறப்படுகிறது. இதனால் பார்த்திபன் மற்றும் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம்.