சமீபகாலமாக உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது அதனுடைய பாதிப்பை தடுக்க பல மாநிலங்கள் தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன அந்த வகையில் தமிழகத்தில் சுகாதார அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்தியாவில் இதன் பாதிப்பு மேலும் வராமல் இருக்க ஏப்ரல் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அயராது போராடி வருகிறார். இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் முன்னணி பிரபலங்கள் பலர், அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா துறையில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சந்திக்கும்போது பார்த்திபன் அவர்கள் மலர் கொத்து கொடுக்காமல் அதற்கு பதிலாக சற்று வித்யாசமாக 5 லிட்டர் sanitizer கொடுத்துள்ளார்.
மேலும் கூடுதலான மருத்துவ வசதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலையில் உதவியாயிருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். பதிவை பார்த்த மக்கள் பலர் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
சமீபத்தில் பார்த்திபன் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மக்களின் சார்பில் வழங்கினேன்.இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன் அந்த யோசனையை கருத்தில் கொண்டு செயல் பட செய்கிறேன் என்றார். pic.twitter.com/TANFXn8vKf
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 25, 2020
உலகம் முழுக்க இந்நோய் பரவி வருகிறது இதனை தடுக்க 24 மணி நேரமும் இதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால் ஒரு யோசனை வந்துள்ளது 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனை நாமே உருவாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இதற்காக தனது வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்துங்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஆதனால் அவரை பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் அவர்களும் தற்போது எனது வீட்டையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.