தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் பார்த்திபன் இவர் மாறுபட்ட கதையம்சம் உள்ள திரைப்படங்களை இயக்கி ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். இவ்வாறு அவர் திரைப்படம் என்றாலே தியேட்டரில் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவிற்கு திரைப்படம் இயக்குவதில் இவர் வல்லவர்.
இவர் திரைப்படம் இயக்குவது மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் பல்வேறு இயக்குனர்களின் திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த வகையில் தானே இயக்கி தானே நடித்த ஒரு திரைப்படம் தான் ஒத்த செருப்பு திரைப்படம் மாபெரும் ஹிட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் பார்த்திபனுக்கு பல்வேறு பாராட்டையும் வாங்கி கொடுத்தது.
அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் தான் இருக்கும் இவ்வாறு தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைப்படம் வெளி வருவது மிகவும் அதிசயமான ஒன்று. இது ஒரு பக்கம் இருக்க நமது நடிகரின் சொந்த வாழ்க்கையை பற்றி பல செய்திகள் வெளிவந்துள்ளது.
அதாவது நடிகர் பார்த்திபன் சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். திருமணம் எனவோ எளிதாக முடிந்து விட்டது ஆனால் இவர்களுடைய விவாகரத்து பெரும் போராட்டத்தை ஏற்படுத்திவிட்டது.
இதனைத் தொடர்ந்து பார்த்திபனின் மனைவி சின்னத்திரை நடிகர் சதீஷை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு அந்த வாழ்க்கையும் இவருக்கு சரியான இன்பத்தை கொடுக்காததன் காரணமாக பிரிந்து விட்டார்கள் இந்நிலையில் நடிகை சீதாவின் மகள் திருமணத்தின் பொழுது பார்த்திபனுடன் வாழ சீதா விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அப்பொழுது சீதா நடந்தது நடந்து விட்டது இனிமேல் வாழ்நாள் முழுவதும் நாம் சேர்ந்து வாழலாம் என்று பார்த்திபனிடம் கூறியிருந்தாராம். அதற்கு பார்த்திபன் பிரிந்தது பிரிந்ததுதான் இனி ஓட்டு வாழ்வதற்கு ஒன்றும் இல்லை எனக்கும் இதில் விருப்பம் கிடையாது என்று தன்னுடைய உரையை முடித்துக்கொண்டாராம்.