வெறும் பொழுதுபோக்காக மட்டும் நினைக்காமல் தன்னுள் உள்ள திறமையை எந்த அளவிற்கு வெளிக்காட்ட முடியுமோ அந்த அளவிற்கு இயக்குனர்களும் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அந்தவகையில் நடிகர்கள் தங்களுடைய நடிப்பின் மூலமாக தங்களுடைய திறனை வெளிக்காட்டுவது போல இயக்குனர்களும் கதை மற்றும் இயக்கத்தின் மூலமாக வெளிக் காட்டி வருகிறார்கள்
அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னுடைய திறனை வெளிக்காட்டி வருபவர் தான் நடிகர் பார்த்திபன் இவர் நடித்தாலும் சரி திரைப்படத்தை இயக்கினாலும் சரி இவருக்கு நிகர் இவர் மட்டும்தான் என்று சொல்லலாம்.
ஏனெனில் இவர்களுடைய திரைப்படத்தின் கதை வித்தியாசமாக இருப்பது மட்டுமின்றி அவருடைய நடிப்பும் தனித்துவமாக எடுத்துக்காட்டும் அந்த வகையில் தனது திறமையின் மூலமாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து கட்டில் போட்டு அமர்ந்துள்ளார் பார்த்திபன்
அந்தவகையில் நடிகர் பார்த்திபன் ஒத்த செருப்பு என்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். மேலும் இவரைத் தவிர அந்த திரைப்படத்தில் வேறு எந்த ஒரு கதாபாத்திரமும் இடம்பெறவில்லை அந்த வகையில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது மட்டுமல்லாமல் சிறந்த நடிகருக்கான விருதும் நடிகர் பார்த்திபனுக்கு கிடைத்தது. இந்நிலையில் திருப்பதிக்கு சென்றுள்ள பார்த்திபன் அங்கு வந்த செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் அப்பொழுது 20 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மூன்றாவது முறையாக தேசிய விருது பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறி உள்ளார்.
மேலும் தற்போது இவர் இரவில் நிழல் என்ற ஒரு குறும் படத்தை இயக்கப் போகிறாராம் அந்த வகையில் இந்த திரைப்படம் ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்ற காரணத்திற்காக தான் ஏழுமலையான் இடம் வேண்டிக் கொண்டேன் அதுமட்டுமில்லாமல் உலகில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்க படம் திரைப்படமாக இது அமையும்.