விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நேற்று வெளிவந்த திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது . திரையரங்கை திருவிழா போல் அலங்கரித்து விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை கொண்டாடினார்கள்.
படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் படத்தில் ஒரு சில சொதப்பல்கள் இருக்கிறது எனவும் குறைகூறி வருகிறார்கள். மேலும் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் வெளியான அன்று திரையரங்கில் பாலபிஷேகம் பட்டாசு வெடிப்பது என திரையரங்கையே திருவிழா போல் மாற்றி கொண்டாடினார்கள் ரசிகர்கள். இந்தநிலையில் பீஸ்ட் படம் பற்றி தங்களுடைய கருத்தை சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள் அந்த லிஸ்டில் தற்பொழுது பார்த்திபன் அவர்களும் பீஸ்ட் படம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது ‘At dawn it’s quiet here’ என்றொரு படமுண்டு.ஆனால் இன்று At dawn it’s quake here காரணமாய் அமைதியே வடிவான விஜய் என்னும் Beast.நேற்றைய இரவின் நிழல்களாய் ஆங்காங்கே உறைந்து கிடந்து, விடியலை, உண்டுயலை உடைப்பதைப் போல உடைத்தெடுத்து,திரையரங்குகளை திருவிழாகளாக்கிய ரசிகர்களை வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார் இவர் மட்டுமல்ல சினிமா பிரபலங்கள் பலரும் பீஸ்ட் திரைப்படம் பற்றி தங்களுடைய கருத்தை வெளியிட்டு வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் பட குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.
‘At dawn it’s quiet here’
என்றொரு படமுண்டு.ஆனால் இன்று At dawn it’s quake here காரணமாய் அமைதியே வடிவான விஜய் என்னும் Beast.நேற்றைய இரவின் நிழல்களாய் ஆங்காங்கே உறைந்து கிடந்து, விடியலை,
உண்டுயலை உடைப்பதைப் போல உடைத்தெடுத்து,திரையரங்குகளை திருவிழாகளாக்கிய ரசிகர்களை வணங்குகிறேன் pic.twitter.com/ShRkFF6RIF— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 13, 2022