மீண்டும் மீண்டும் முதலை வாயில் கை வைக்கும் பார்த்திபன்..! இணையத்தில் லீக்கானது பார்த்திபனின் அடுத்த பட அப்டேட்..!

parthipan-01
parthipan-01

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வித்யாசம் காட்டுவது மட்டும் இல்லாமல் வேறு கோணத்தில் திரைப்படத்தை இயக்குவதில் வல்லமை பெற்றவர் தான் நடிகர் பார்த்திபன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அந்த வகையில் நமது நடிகர் மற்ற நடிகர்கள் நடிகைகள் இல்லாமல் ஒரே ஷாட் என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமாக யோசித்து திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

அந்த வகையில் கதையில்லாமல் வெளியான திரைப்படம் தான் கதை திரைக்கதை வசனம் இயக்கம் இதனை தொடர்ந்து  மற்ற நடிகர்கள் யாரும் இல்லாமல் இவர் ஒருவர் மட்டுமே நடித்த திரைப்படம் தான் ஒத்த செருப்பு இதனை தொடர்ந்து வெவ்வேறு கோணம் கொண்ட கதைகளை வைத்து ஒரே சாட்டில் ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளார்  இந்த திரைப்படம் தான் இரவின் நிழல்.

அந்த வகையில் பார்த்திபனால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என பலர் நினைக்கும் போதெல்லாம் தன்னை தாண்டி யோசித்து மிகவும் பிரமாண்டமாக தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படம் முதலில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வருகிறார். இதனை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் ஒரு திரைப்படத்தை  பார்த்திபன் இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அடுத்ததாக இயக்குனர் பார்த்திபன் அவர்கள் இயக்க போகும் திரைப்படத்தில் வெறும் விலங்குகளை மட்டும் வைத்து தன்னுடைய அடுத்த திரைப்படத்தை இயக்க போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் எந்த ஒரு அனிமேஷனும் இல்லாமல் இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பொதுவாக நமது நாட்டில் விலங்குகளை துன்புறுத்தும் வகையில் எதுவும் செய்யக்கூடாது அந்த வகையில் அதற்கான பல கட்டுப்பாடுகள் இருக்கிறது இந்த நிலையில் பார்த்திபன் விலங்குகளை மட்டும் வைத்து எப்படி படம் இயக்க போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.